• டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.

·        டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 01.05.2025 (வியாழன்) அன்று மே தினம் என்பதால், அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி தினத்தில் (01.05.2025) வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபானக் கூடங்கள் (FL1/ FL2/ FL3/ FL3A / FL3AA and FL11) அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அன்றை தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது தமிழ்நாடு மது விலக்குச் சட்டம் 1937 மற்றும் சம்மந்தப்பட்ட இதர விதிகளின்கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதே போல் அன்றைய தினத்தில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ண்ணீரு

செய்திவெளியீடு: செய்திமக்கள்தொடர்புஅலுவலர், வேலூர்.

வேலூர்மாவட்டத்தின்செய்திகளைஉடனுக்குடன்தெரிந்துக்கொள்ள :

WhatsApp Image 2023-08-21 at 15      @provelloreIPro Vellore    iprovellore

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.