• மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.52,87,029/- செயற்கை அவயங்கள், உபகரணங்கள்.

 ·        வேலூர் மாவட்டத்தில் 238 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.52,87,029/- மதிப்பில் 415 எண்ணிக்கையிலான செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8 சிறப்பு முகாம்களில் செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகளில் 238 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்.ஈ.சி  நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.52,87,029/- மதிப்பில் 415 எண்ணிக்கையிலான செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 34,602 மாற்றுத் திறனாளி நபர்கள் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் 12 அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து ஒற்றை சாளர முறையிலான சிறப்பு முகாம்கள் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு,ணியம்பாடி, கீ.வ.குப்பம், அணைக்கட்டு மற்றும் அகரம் ஆகிய 8 இடங்களில் 24.01.2025 முதல் 26.02.2025 வரை நடைபெற்றது.

மேற்கண்ட 8 முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக 3062 மனுக்களும்,  வருவாய் துறை சார்பாக 683 மனுக்களும், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 339 மனுக்களும், தாட்கோ நிறுவனத்தின் சார்பாக 66 மனுக்களும், முன்னோடி வங்கிகளின் சார்பாக 313 மனுக்களும், மாவட்ட தொழில் மையம் சார்பாக 60 மனுக்களும், மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக 178 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 127 மனுக்களும், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் சார்பாக 160 மனுக்களும்,  ஆதார் வேண்டி 12 மனுக்களும், மாநகராட்சி தொடர்பா 32 மனுக்களும், அலிம்கோ நிறுவனம் தொடர்பா 429 மனுக்களும், என மொத்தம் 12 துறைகளின் சார்பில் 5468 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களின் தொடர்ச்சியாக தற்பொழுது அலிம்கோ நிறுவனத்தின் மூலம் 238 மாற்றுத் திறனாளிகளுக்கு 415 எண்ணிக்கையிலான நவீன செயற்கை கால் அவயங்கள்,  காதொலி கருவிகள், ஊன்றுகோல், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கைத்திறன் பேசி,  மடக்கு சக்கர நாற்காலி,  மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள்,  கற்பித்தல் மற்றும் கற்றல் உபகரணம், தொழுநோயால் பாதிக்கபட்டோர்களுக்கு அன்றாடம் பயன்படுத்தும் உபகரணம்,  முடநீக்கியல் சாதனங்கள் என  ரூ.52,87,029/- மதிப்பில் 415 எண்ணிக்கையிலான செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்களை 238 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தாவுது,

வேலூர் மாவட்டத்தில் 34,602 மாற்றத் திறனாளிகள் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் உலக வங்கி உதவியுடன் TN RIGHTS எனும் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார அளவிலும் 8 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களானது  நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எண்ணற்ற மாற்றத்திறனாளிகள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீட்டுமனை பட்டா,  100 நாள் வேலை அடையாள அட்டை,  தொழில்புரிய வங்கி கடனுதவி,  அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். இந்த முகாம்களை சிறப்புற நடத்திடவும்,  மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான போக்குவரத்து, உணவு போன்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்திவிடவும் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றியக் குழு தலைவர்கள், மாநகராட்சி மேயர் என அனைவரும் பல்வேறு விதமான உதவிகளை மேற்கொண்டனர். இந்த முகாம்களில் சுமார் 10,000 அதிகமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு 5482 மனுக்களை வழங்கி உள்ளனர்.

இந்த முகாம்களில் முடிந்தவரை அன்றைய தினமே தீர்வு காணப்பட வேண்டிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அதன் அடிப்படையில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 793 நபர்களுக்கும், UDID அடையாள அட்டை 98 நபர்களுக்கும். இலவச போக்குவரத்து பயண அட்டை 330 நபர்களுக்கும்,  தொடர்வண்டி பயண அட்டை 292 நபர்களுக்கும் அன்றைய தினமே வழங்கப்பட்டது.  மேலும் வீட்டுமனை பட்டா வேண்டி 540 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 60 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆரிமுத்துமோட்டுர் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகளும் கட்டி முடிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

இந்த முகாம்களில் செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்கும் அலிம்கோ நிறுவனமும் பங்கேற்று காலை முதல் மாலை வரை அந்த இடத்தில் செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த மாற்றத் தினாளிகளுக்கு தேவையான செயற்கை கை, கால் போன்ற அளவீடுகள்,  அவர்களுக்கு தேவைப்படும் காதொலி கருவிகள் மற்றும் இதர உபகரணங்கள் குறித்து அளவீடு எடுத்துக் கொண்டு அவற்றை உற்பத்தி செய்து தற்பொழுது நடைபெறும் நிகழ்ச்சியிலே வழங்கி வருகிறார்கள்.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்காக பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூபாய் 53 லட்சம் அளவிற்கு நீதி உதவியை வழங்கியுள்ள ஆர்.ஈ.சி நிறுவனத்திற்கும்,  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஆர்.ஈ.சி நிறுவனத்தின் தனி இயக்குர்-க்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 6000 மாற்று திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவி தொகை வழங்கப்படுகிறது.  மேலும் நம்முடைய மாவட்டத்தில் 3 சிறப்பு பள்ளிகள் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் 25-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருமண உதவித்தொகை உள்பட 18 வகையான நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 200 மாற்றத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.  இந்த ஆண்டு 300 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், .கார்த்திகேயன், ஆர்.ஈ.சி நிறுவன தனி இயக்குர் நாராயணன் திருப்பதி,  வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,  துணைமேயர் சுனில்குமார்,  மண்டல குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான், லிம்கோ நிறுவன முதுநிலை மேலாளர் வி.கே.குப்தா, ஆர்.ஈ.சி நிறுவன  முதன்மை மேலாளர் இமானுவேல் ஆன்டனிதாஸ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.