• வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள்.
· வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஏலகிரி அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 அன்றைய சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்களின் நலனுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி முன்னாள் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும் சுயதொழில் தொடங்கிடவும் வங்கிகள் மூலம் ஒரு கோடி வரை வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30-விழுக்காடு மூலதன மானியமாகவும் கடனுக்கான வட்டியில் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும் இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த 200-க்கும் அதிகமான முன்னாள் படை வீரர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் பல்வேறு சுயவேலைவாய்ப்பு செய்திட கடனுதவி வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவால் 163 நபர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த 163 நபர்களில் 81 நபர்களுக்கு வங்கியால் ரூ.15,26,97,000/- அளவிலான பல்வேறு சுய வேலைவாய்ப்பு செய்திட "Provisional Sanction Letter" பெறப்பட்டுள்ளதால் முதலாவதாக இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் ஆறு நாட்கள் சிறப்பு பயிற்சி மூன்று கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக 45 முன்னாள் படைவீரர்களுக்கு 28.04.2025 முதல் 03.05.2025 வரையிலான சிறப்பு பயிற்சியினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குநர் லெப்.கர்னல். ஆர்.பி.வேலு, வேலூர் மாவட்ட இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன அலுவலர் புவனா, முன்னாள் படைவீரர் நல சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment