• வல்லம் ஊராட்சியில் மக்கள் நல சந்தை முன்னெடுப்பில் "கிராமத்து கைமணம் .
மக்கள் நலத் சந்தை முன்னெடுப்பில் "கிராமத்து கைமணம்" வல்லம் ஊராட்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வல்லம் ஊராட்சியின் பல கிராமங்களில் இருந்து 32 பெண்கள் பாரம்பரிய உணவுகளை கிராமத்து கைமணம் மணக்க மணக்க பல வகையான உணவுகளை சமைத்து நிகழ்வுக்காக கண்காட்சிக்கும் போட்டிக்கும் வைத்திருந்தனர்.
கிராமத்து மக்களும் திரண்டு வந்து இந்த கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு களித்தனர் . இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் இந்த கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார் . பலரும் ஆர்வத்தோடு உணவுகள் சமைத்துக் கொண்டு வந்ததை மகிழ்ச்சி பொங்க பாராட்டினார் .
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது.
தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்ட கிராமிய உணவு பொருட்களுக்கு மூன்று நபர்கள் கொண்ட குழு தேர்வு செய்தது .
இறுதியில் மூன்று நபர்கள் முதல், இரண்டு மூன்றாம் பரிசினை வென்றார்கள்.
பாராட்டு விழா தொடர்ந்து நடைபெற்றது. பங்குபெற்ற அத்தனை பெண்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர். வென்றவர்களுக்கும் பரிசு பொருளும் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன் கிராமத்து கைமணம் குறித்து விளக்கம் அளித்தார் .
ஏன் நாம் துரித உணவை புறக்கணிக்க வேண்டும் நமது பாரம்பரிய உணவை நாம் கைவிடாமல் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கினார்.
கணியம்பாடி ஒன்றிய விவசாய துறை உதவி இயக்குனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டினார்கள். விவசாய அலுவலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். தலைவர் சிவகுமார், நாம் ஏன் இயற்கைக்கு திரும்ப வேண்டும் என்பதை விளக்கினார்.
வந்திருந்த அனைவரையும் WAN செயலாளர் மாலதி வரவேற்றார். சதாசிவம் நன்றியுரை செய்தார்கள் .
மக்கள் நல சந்தை சார்பாக குணசுந்தரி, தமிழரசி, சரண்யா, வாசுகி, சரிதா, ஹேமலதா, குருராகவேந்திரன், கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். வந்திருந்த அனைவரும் இயற்கை உணவை நோக்கி பயணிக்க வேண்டும் என்கின்ற உறுதியுடன் சென்றார்கள் என்பது நெகிழ்வான தருணம்.
இந்த சிறப்பான நிகழ்வினை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் பொறுப்பேற்று அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நிறைவாக நடத்தி கொடுத்தமைக்கு மக்கள் நல சந்தை சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்
கு செந்தமிழ் செல்வன்,
ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல சந்தை 94430 32436
Comments
Post a Comment