• வேலூரில் வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு.
· வேலூரில் வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு.
· காலிப் பணியிடங்கள் நிரப்பவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செயற்குழுவில் தீர்மானம்
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள கோட்டை சுற்று சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திருமலைவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில துணைதலைவர் ரவி, மாநில பொதுசெயலாளர் எஸ்.ரவி, பொருளாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோரும் திரளான கிராம வருவாய் ஊழியர்களும் பங்கேற்றனர்.
இந்த மாநில செயற்குழுவில் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment