• ஆசிரியர் ஞானசக்தி வேலன் சிவபுராணம் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா

·         ஆசிரியர் ஞானசக்தி வேலன் எழுதிய சிவபுராணம் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா - கவிஞர் .லக்குமிபதி வாழ்த்து

     வேலூர், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா மற்றும் ஆசிரியர் கா.ஞானசக்திவேலன் எழுதிய சிவபுராணம் விளக்க உரை என்ற நூல் வெளியீட்டு விழா ஆசிரியர் இல்லத்தில் நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற நூலகர் ஜெ.ரவி தலைமை தாங்கினார். இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஜெ. ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கவிஞர் பொன்.ராஜன்பாபு வரவேற்றார்.

     வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் .லக்குமிபதி கலந்து கொண்டு சிவபுராணம் விளக்க உரை நூலை வெளியிட்டு நூலின் சிறப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

     பள்ளி தலைமை ஆசிரியர்  ஜோசப் அன்னையா முதல் நூலை பெற்றுக்கொண்டு சிறப்பு கவிதை வாசித்தார்.

     பேராசிரியர் பொன். செல்வகுமார் பாராட்டி பேசினார்.

     விழாவில் ஓய்வு பெற்ற பள்ளி எழுத்தர் ஆர்.கார்த்திகேயன் சுடர் பதிப்பக உரிமையாளர் கிருஷ்ணகுமார், கவிஞர்கள் எஸ்.கே.எம்.மோகன், சித்ரா, சிலம்பரசி எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளர் வேலூர் சிவமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     நூலாசிரியர் கா.ஞானசக்தி வேலன் ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் .எம்.காமராஜ் நன்றி கூறினார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.