• அணைக்கட்டு தொகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு.
· அணைக்கட்டு தொகுதியில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மூன்று மாணவிகள்
· அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பாராட்டு.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பாராட்டும் மற்றும் பரிசுகள் வழங்கும் விழாவானது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகளையும் வழங்கி கௌரவித்து அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மாணவர்களை பாராட்டினார். இதில் திரளான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment