• சித்திரை முழு நிலவு மாநாடு - தீர்மானம்.


 ·         மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் சார்பில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க தீர்மானம்.

         வேலூர் மாவட்டம், பொய்கையில் தனியார் திருமண மண்டபத்தில் காட்பாடி, அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பொதுகுழு கூட்டம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

     இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணைசெயலாளர் சுரேஷ், பாமக மாநில துணைதலைவர் என்.டி.சண்முகம், இளவழகன், மாவட்ட செயலாளர்கள் ரவி, ஜெகன் மாநில பொறுப்பாளர்கள் ஜானகிராமன், சக்ரவர்த்தி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கலந்து கொண்டு பேசினார். இதில் வரும் மே 11-ம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டில் 25 ஆயிரம் பேர் இம்மாவட்டத்திலிருந்து வாகனங்களில் வந்து பங்கேற்பது எனவும், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி  எல்லா சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.