• நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் புதிய வசதி.

·        நிலங்களை நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் புதிய வசதி.

வேலுார் மாவட்டம் அனைத்து வட்டங்களுக்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தபட்ட வட்ட அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலங்களுக்கு செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு செல்லாமல்Citizen portalமூலமாக  இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (-சேவை) மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிலஉரிமைதாரர்கள் தங்களது நிலங்களை நில அளவை செய்ய பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.

நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர், மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்டஅறிக்கை வரைபடம்நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.