• பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்.

·         பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பள்ளி  மாணவ,  மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் நீதிநெறி கல்வி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் - மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் இனத்தின் மறுமலர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களை போற்றும் வகையில் அவர் பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் முதல் மே மாதம் 5 ஆம் நாள் வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வாரம் கொண்டாடப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தமிழ் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் வருகின்ற 05.05.2025 மற்றும் 06.05.2025 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மற்றும் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு நடைபெற உள்ளது.

போட்டிகள்நடைபெறும்நாள் : 05.05.2025

வகுப்பு

போட்டிகள்

தலைப்புகள்

3 -5

பேச்சுப்போட்டிஇசையுடன்பாடுதல்

பாரதிதாசனின்தமிழ்பற்று,

சமூகசிந்தனை

6 -8

பேச்சுப்போட்டி

கவிதைப்போட்டி

பாரதிதாசன்பார்வையில்பெண்கல்வி,

தமிழ்பற்று,  சமூகசிந்தனை

9 -10

கட்டுரைப்போட்டி

பேச்சுப்போட்டி

கவிதைப்போட்டி

பாரதிதாசனின்சமுதாயஉணர்வு,

பாரதிதாசன்பார்வையில்பெண்கல்வி,

தமிழ்பற்றுசமூகசிந்தனை

11 -12

பேச்சுப்போட்டி

கட்டுரைப்போட்டி

கவிதைப்போட்டி

பாரதிதாசனின்சமுதாயஉணர்வு,

பாரதிதாசன்பார்வையில்பெண்கல்வி,

தமிழ்பற்று,  சமூகசிந்தனை

 

போட்டிகள்நடைபெறும்நாள் : 06.05.2025

வகுப்பு

திருக்குறள்ஒப்புவித்தல்

3 -5

ஏதேனும் 30 திருக்குறள்

6 -8

ஏதேனும் 50 திருக்குறள்

9 -10

ஏதேனும் 100 திருக்குறள்

11 -12

ஏதேனும் 150 திருக்குறள்

பொது

ஏதேனும்200திருக்குறள்

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழுக்கங்களை உருவாக்கும் வகையில் தமிழ் நீதி நூல்களான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, திரிகடுகம், நாலடியார், பழமொழி நானூறு, பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி போன்ற நீதி நூல்கள் குறித்த வகுப்புகள் வேலூர் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மற்றும் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மையங்களில் 05.05.2025 முதல் 15.05.2025 வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன்-ன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் நீதிநெறி கல்வி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.