• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 398 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 398 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் பாது, கௌசல்யா, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில்குமார், செல்வி சுபலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், உதவி இயக்குநர் (நில அளவை) குமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வே.முத்தையன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment