• வேலூர் பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரி திருவிழா.

·         வேலூர் பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரி திருவிழா.

    ·         ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு, தேரை தூக்கி வழிபாடு - மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தினர்.

                வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் ஏரி திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத ஏரி தேர் திருவிழாவானது நடைபெற்றது.

     வித்தியாசமான முறையில் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டிகொண்டு மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டிகொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும். கால்நடைகள் நோய்நொடியின்றி இருக்க வேண்டும். இயற்கை வளங்கள் செழிக்க வேண்டும். என வேண்டுதல்களை வைத்தும், வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னரும் பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி, ஏரியிலேயே ஆடு கோழிகளை பலியிட்டு உணவாக சமைத்து அங்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கி தாங்களும் அவர்களுடன் உணவருந்தி அம்மன் ரதத்தை தோலில் சுமந்து தூக்கி விழாவை கொண்டாடினர்.

     இதில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சித்தூர், பெங்களூர், சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டு வேண்டுதல்களையும், நேர்த்தி கடனையும் செலுத்தினார்கள்.  

           அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேளதாளங்கள் முழங்க ரதத்தை தூக்கி வந்து ஏரியில் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மூலைகேட் பகுதியில் ஆயிரகணக்கானோருக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு அன்னதானம் வழங்கினார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.