• முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட விண்ணப்பம்.
முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை விண்ணப்பம்.
சமூகநலன்
(ம) மகளிர் உரிமைத் துறையின்கீழ்
செயல்படுத்தப்படும் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வேலூர்
மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட
பயனாளிகளுக்கு முதிர்வு தொகை பெற்று வழங்கிட வட்டார விரிவாக்க அலுவலர் (ம) ஊர்நல
அலுவலர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து ஆவணங்களை பெற்று ஆணையரகம் மூலம் தொகை பெற்று வழங்கப்பட்டு
வருகிறது.
மேலும் வைப்புத்தொகை பத்திரம் பெற்று 22 வயது மற்றும் அதற்கு மேல் பூர்த்தி அடைந்தும் முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம், வங்கி கணக்கு விவரம் (தனி கணக்கு). 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் வேலூர் மாவட்ட சமூகநல அலுவலகம் அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள விரிவாக்க அலுவலர் மற்றும் ஊர்நல அலுவலர்களிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment