• வேலூரில் சித்திரை திருவிழா
· வேலூரில் சித்திரை திருவிழா - 8 பூப்பல்லக்குகள் பவனி - ஒரு லட்சம் மக்களுக்கு மேலாக பங்கேற்பு.
· இந்திய ராணுவத்தின் புகழை போற்றும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்று ஆப்ரேஷன் சிந்தூர் ஜேட் விமானம் -தேரில் அமைத்து கொண்டாடிய இளைஞர்கள்.
வேலூர் மாவட்டம், வேலூரில் சித்திரை திருவிழா பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு இடங்களில் மேடைக் கச்சேரிகளும் நடைபெற்றன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தனித்தனி பல்லக்குகளாக ஜலகண்டீஸ்வரர் கோவில் பூப்பல்லக்கு, செல்வ விநாயகர் ஆலய பூப்பல்லக்கு, தாரகேஸ்வரர் பூப்பல்லக்கு, விஷ்னு துர்கை பூப்பல்லக்கு, பெருமாள் கோவில் பூப்பல்லக்கு, கனகதுர்கை அம்மன் பூப்பல்லக்கு, வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு, லஷ்மி நரசிம்மர் சாமி கோவில் பூப்பல்லக்கு ஆகிய 8 பூப்பல்லகுகள் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுடன் பவனி வந்தன.
இந்தியாவையும் பாரத நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரை வரவேற்றும், ஜேட் விமானம் போல் அமைக்கப்பட்டு அதில் ஆப்ரேஷன் சிந்தூர் என குறிப்பிட்டு அதனை இளைஞர்கள் வரவேற்று கொண்டாடினார்கள்.
வான வேடிக்கை பல்வேறு மேளதாளங்களுடன் மண்டி வீதி, லாங்கு பஜார், கம்சரி பஜார், பில்டர் பெட் சாலை வழியாக அண்ணா சாலையை அடைந்து கோட்டை வெளி சாலையில் பூப்பல்லக்குகள் பவனி வந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
Comments
Post a Comment