• தேனி மாவட்ட பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய மனு.

·         தேனி மாவட்ட பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.

     தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடத்தில் நிலங்களை ஒப்படைக்க தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் நேரில் சந்தித்து இந்திய குடியரசு கட்சியின் சார்பிலும் தொழிற்சங்கத்தின் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

              இதில் தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடத்தில் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு நிலங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.              துப்புரவு பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில் தங்களது மேலதிகாரிகளால் சாதிய வன்மத்துடன் பழிவாங்கும் நோக்கோடும் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்படி செயல்படுகிற அதிகாரிகள் மீதும், இதற்கு துணை போகிற அலுவலர் கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான  தண்டனை  வழங்க வேண்டும் என்பது உட்பட பலவேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

                மாநில தலைவர் இரா.அன்புவேந்தன், மூத்த தலைவர் மு.மகிழ்வாணன், கு.தன்ராஜ், நா.ஜெகநாதன், .கல்பனா, நடராஜன், சித்தார்த்தன், குடியரசு, பிச்சைமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.