• வேலூர் மாவட்டத்தில் 2026 ஆண்டிற்கான பத்ம விருதுகள்
· வேலூர் மாவட்டத்தில் 2026 ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெற தகுதியுள்ள நபர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினவிழாவில் உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த கீழ்க்காணும் தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
1. தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்ககம்
2. இவ்விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும்.
3. இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்ததக்கதாக இருத்தல் வேண்டும்.
4. இவ்விருது உயர்ந்த தரநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும்.
5. பத்ம விருதுகள் நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதாக இருப்பதால், இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மாநில விருதோ பெற்றிருக்க வேண்டும்.
6. இவ்விருகிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், தலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இவ்விருதிற்கு பரிந்துரை செய்யப்படும்.
7. சிறந்த சாதனையாளராக இருந்து இறந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை. இருந்த போதும் மிக தகுதியானவர்களுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் இறந்திருந்ததால் அவர்கள் இவ்விருதிற்கு பரிசீலிக்கப்படலாம்
8. இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இவ்விருது பெற்ற நாளிலிருந்து 5 வருடத்திற்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும். இருந்தபோதிலும் மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு கால கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும்.
9. அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர் விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
மேற்காணும்
தகுதிகள் பெற்றவர்கள் பத்ம விருதிற்கு ஆன்லைன் முறை மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம் https://awards.gov.in என்ற
இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்விருதிற்கு இணைய வழியில்
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2025 ஆகும். வேலூர் மாவட்டத்திலுள்ள தகுதியான
விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பித்து
பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment