• சாலை விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்தாரிடம் ரூ. 3.0 இலட்சம் நிவாரண நிதி.

·        சாலை விபத்தில் மரணம் அடைந்தவர் குடும்பத்தாரிடம் ரூ. 3.0 இலட்சம் நிவாரண நிதி.

                 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஓங்கப்பாடி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச்  சேர்ந்த திரு.கோகுல் (வயது 25) த/பெ.கோவிந்தராஜ், என்பவர் கடந்த 09.04.2025 அன்று மாலை 4.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில், வெட்டுவானம் சர்வீஸ் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த மண் நிரப்பிய பேரல் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேற்படி விபத்தில் உயிரிழந்தவரின் மனைவி ரேகா என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3.0 இலட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, சாலை விபத்தில் மரணம் அடைந்த திரு.கோகுல் அவர்களின் குடும்பத்தாரிடம் ரூ. 3.0 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது வே.முத்தையன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.