• வேலூர் கம்பன் கழகம் கண்ணதாசன் பிறந்த நாள் விழா.
· மொழி பிரச்சனை பற்றியும் கண்ணதாசன் அன்றைக்கே எழுதியுள்ளார் - விஐடி வேந்தர் ஜி விஸ்வநாதன் பேச்சு:
வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பன் கழக தலைவர் கோ.வி செல்வம் தலைமையில் பெற்ற இவ்விழாவில், பல்வேறு கவிஞர்கள் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வேலூர் விஐடி பல்கலை கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், திரைப்படத் துறை கவிதைகளில் இன்னும் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 25 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களுக்கு எழுதி இருக்கிறார். தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவருடைய படங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. காப்பியங்கள் 10 எழுதப்பட்டிருக்கின்றன. சிற்றிலக்கியங்கள் ஒன்பது வந்திருக்கின்றன. கவிதை நாடகமாக கவிதாஞ்சலி என்று ஒன்று வந்திருக்கிறது. இரண்டு நூல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். 27 புதினங்களை எழுதி இருக்கிறார்கள்.
தன் வரலாறு என்ற பெயராலே வனவாசம் மனவாசம், கலைஞரும் கண்ணதாசனும் நெருக்கமாக இருந்த காலத்தில் எழுதி இருக்கிறார்கள். 45க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை 1958-ல் தொடங்கி அவர்களை எழுதி முடித்திருக்கின்றார். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களை கொஞ்சம் எடுத்து நீங்கள் படிக்க வேண்டும்.
அவர் எல்லாம் எப்படி வாழ்ந்தார் என்பதை விட அவர் எப்படி எழுதினார் என்பதுதான் முக்கியம். அவருடைய கவிதைகள் என்றைக்கும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும். ஆங்கிலம் வாழுமாயிண் அறிவழகன் அனைத்தும் வாழும் என்ற கவிதையில், ஆங்கிலம் வளர்க்கும் போதே அன்னைத் தமிழும் வாழ்வாள் என்று சொல்லி ஆங்கிலம் நமக்கு முக்கியமானது என்பதை குறிப்பிட்டு மொழி பிரச்சனை பற்றியும் கண்ணதாசன் அன்றைக்கே எழுதியுள்ளார். கண்ணதாசனின் பல கவிதைகள் கருத்துக்களுடையதாக அமைந்துள்ளது. அவற்றையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டும் என்று ஜி.விஸ்வநாதன் பேசினார். நிகழ்ச்சியில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
Comments
Post a Comment