• வேலூரில் பாஜக முன்னாள் மாநில செயலாளர் அஸ்வதாமன் பேட்டி.

·         வேலூரில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் ஒன்றுமே இல்லை - பாஜக முன்னாள் மாநில செயலாளர் அஸ்வதாமன் வேலூரில் பேட்டி.

                வேலூர் மாவட்டம், வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எமெர்ஜென்சியை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக கருத்தரங்கு மாவட்ட பாஜக தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக செயலாளர் அஸ்வதாமன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சரவணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

              பின்னர் பாஜக முன்னாள் மாநில செயலாளர் அஸ்வதாமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     வேலூர் அரசு மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் அது வெறும் கட்டிடம் மட்டும்தான். அதனுள் ஒன்றுமில்லை. கட்டிடத்தை மட்டும் திறந்துவிட்டு போதுமான அடிப்படை வசதியில்லை. மத்திய அரசு பணத்தை பெற்று கொண்டு அதனை மக்களுக்காக செலவிடாமல் பாவ்லா காட்ட மருத்துவமனையை திறந்து வைத்துள்ளனர். மக்கள் கொதித்து போயுள்ளனர்.

     எந்த விதமான வசதியுமில்லாமல் ஸ்டிக்கர் அரசியலை செய்துள்ளீர்கள். 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பாஜக கொடி கட்ட கூட அனுமதியில்லை. காவல் துறை திமுகவின் ஏவல் துறையாக உள்ளது.

     இன்றைக்கு எங்கள் மாவட்ட தலைவர் மீது வழக்கு போடுவோம் என மிரட்டுகிறது காவல் துறை. வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் ஓடுகிறது. வந்தே பாரத் முழுவதும் ஏசி. அதில் அதிக வசதிகள் உள்ளது. திருவண்ணாமலை ரயில் காட்பாடி வேலூர் வழியாக வர வேண்டும். ஆனால் மத்திய அரசு ஒன்பது மேம்பாலம் கட்டியும் மாநில அரசு  ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தி இடம் தாராததுதான் காரணம் திராவிட மாடல்தான் காரணம். ஆனால் உலகத்திலேயே மிக உயரமான ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணித்தார். மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பல திட்டங்களை மக்களுக்காக செய்கிறார். வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை உள்ளே ஒன்றுமில்லை மக்களை ஏமாற்றுகிறார்கள் என போராடுவோம். சாலை மறியலும் செய்வோம் என கூறினார்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.