• வேலூர் மாவட்டத்தில் டென்சிங்நார்கே தேசிய சாகச விருது
· வேலூர் மாவட்டத்தில் டென்சிங்நார்கே தேசிய சாகச விருது பெற தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நிலம், கடல் மற்றும் வான் வழியில் சாதனை படைத்தவர்களுக்கு டென்சிங்நார்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2024ம் ஆண்டிற்கு மேற்படி டென்சிங்கே தேசிய சாகச விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை இந்திய அரசு இணையதளமான https://awards.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களுடன் அதே இணைய தளத்தில் 30.06.2025ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
எனவே வேலூர் மாவட்டத்திலுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment