• ஜுன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
· ஜுன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் ஜுன் 2025-ஆம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கு ஜீலை 02 முதல் 22 வரையில் கோமாரி தடுப்பூசி செலுத்த உள்ளதால், விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்திட அறிவுறுத்தப்பட்டது.
வேளாண்மை துறை மூலம் நடப்பு நிதியாண்டில் வேளாண்மை துறை திட்டங்கள் விவரங்கள் அடங்கிய கையேடு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்-ல் வழங்கப்பட்டது.
வேளாண்மைத் துறையின் மூலம் சணப்பு / தக்கைப் பூண்டு பசுந்தாள் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒட்டு புளியங்கன்றுகள் வழங்குதல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள தனியார் நர்சரியை விவசாயிகள் பார்வையிட அழைத்து செல்ல வேண்டுதல், மா, தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கள ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு தொகை வழங்குதல், மா அதிக விளைச்சலின் போது விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் மான்யம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
வேளாண் வணிகத் துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
வனத்துறையின் மூலம் மேல்அரசம்பட்டு பகுதியில் தடுப்பணை கட்டுதல், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை நடமாட்டத்தை கண்காணித்தல் மற்றும் விண்ணம்பள்ளி பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் அவற்றை சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்திட கோரிக்கை வைக்கப்பட்டது.
குடியாத்தம் சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை ஏற்படுத்த உரிய இடம் தேர்வு செய்திட வருவாய் கோட்டாட்சியர், குடியாத்தம், நகராட்சி ஆணையர் குடியாத்தம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குடியாத்தம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட அறிவுறுத்தப்பட்டது.
குடியாத்தம் தெற்கு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுத்து தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.
நீர்ஆதார துறையின் மூலம் மோர்தானா கால்வாய் திறந்து ஆயக்கட்டு பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருக உரிய நடவடிகை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.
மாநகராட்சி மூலம் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோ சாலையில் விட்டு மாட்டு உரிமையாளர் அபராதம் செலுத்தி மாடுகளை திரும்ப அழைத்து செல்லுமாறு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் போர்வெல்கள் பயன்பாடு இல்லாமல் இருப்பதை ஆய்வு செய்து அறிக்கை அளித்த அறிவுறுத்தப்பட்டது.
விழுந்தக்கல் மற்றும் இலத்தேரி ஏரிகளிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பணிகளுக்காக பயன்படுகிறதா என ஆய்வின் மூலம் உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டி
காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் பகுதி நேரமாக செயல்படும் நியாய விலை கடையை முழு நேராமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
ஊசூர் கிராமத்தை பேரூராட்சியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
முன்னதாக தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கொத்தூரை சேர்ந்த விவசாயி கோட்டீஸ்வரன், சாமை பயிர் சாகுபடியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றதற்கு உழவர் நலத் துறை அமைச்சர் வழங்கப்பட்ட ரூ.1.50 இலட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி-டம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, இணை இயக்குநர் (வேளாண்மை) ஸ்டீபன் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயத்துரை, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சு.இராமதாஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகராட்சி ஆணையர் இலட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில்குமார் (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment