Posts

Showing posts from July, 2025

• இந்து முன்னணி வெள்ளையப்பன் நினைவு தினம்.

Image
 ·           வேலூ ர் ல்   இந்து முன்னணி வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம்.     ·          இந்து முன்னணியினர் சமர்ப்பண நாளாக அனுசரிப்பு.     ·          வெள்ளையப்பன் திரு உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை.       வேலூர் மாவட்டம் , வேலூர், முத்துமண்டபம் அருகேயுள்ள பாலாற்றில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் சமர்ப்பண நாளாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் முருகானந்தம் , மற்றும் நிர்வாகிகள் , ராஜேஷ் உள்ளிட்டோரால் பாலாற்றில் உள்ள வெள்ளையப்பன் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . மேலும் பல்வேறு ஆன்மிக பாடல்களையும் பாடி வெள்ளையப்பனுக்கு அஞ்சலியை செலுத்தினார்கள்.

• Applications for the regularisation of individual plots.

·         Applications for the regularisation of individual plots.            For the year 2025–2026, the Hon’ble Minister for Housing and Urban Development Department has made announcement No.5, that “Applications for the regularisation of individual plots in unapproved layouts registered before 20.10.2016 shall be received without any time limit.” Following this announcement, from 01.07.2025 the people who purchased such individual plots shall register their application through online at www.onlineppa.tn.gov.in. Additionally, extension of time limit upto 30.06.2026 to regularise layouts in which any plot sold and registered on or before 20.10.2016 without any changes in the rules issued earlier was issued vide Government Order No. 70, Housing and Urban Development Department, dated: 15.05.2025. So, it is hereby informed that those who are interested to apply can register their application from 01.0...

• வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

Image
·          வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல்     ·          மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து ஐந்து தளங்களில் ஆய்வு.       வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு தபால் மூலம் கடிதம் அனுப்பட்டுள்ளது. அது மொட்டை கடிதம் வந்தது. அதில் வெடிகுண்டு வெடிக்கும் என இருந்ததால் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதில் மெட்டல் டிடெக்கர், அக்னி என்ற மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் ஐந்து தளங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இது சோதனைக்கு பின்னர் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.  

• வேலூர் மாவட்ட நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்.

·         வேலூர் மாவட்டத்தில்   நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக 2025-26 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர். தமிழகத்தைச் சார்ந்த நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக 2025-26- ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.                     விளையாட்டை மேம்படுத்தவும் , விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் , நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1978 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நலிந்த நிலையிலிருக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் பெற்று , தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு , மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6000/-   வழங்கப்பட்டு வருகிறது.      ...

• வேலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்.

Image
·          வேலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 6 அ ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.                 வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் மஞ்சுளா துவங்கி வைத்தார்.       இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் , நிர்வாகிகள் ஜோசப் அன்னய்யா , சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.       பதவி உயர்வு வழங்கிவிட்டு காலியாக அனைத்து முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும் வெளிப்படையான பொது மாறுதல்களை நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற முறைகேட்டை தடுக்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல...

• வேலூர் மாவட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக் கு மாவட்ட அளவி ல் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக ள் ·         கொணவட்டம், அரசு   மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்ட அரங்கில்04.07.2025     நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாக க் கொண்டாட பெறும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது. அவ்வறிவிப்பினைச் செயற்படுத்துதல் தொடர்பில் அதன் ஒரு பகுதியாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக் கு மாவட்ட அளவி ல் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக ள் 04.07.2025   வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 9.30 மணியளவில் கொணவட்டம், அரசு   ...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் -   மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 473   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை த் தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 473 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத...

• வேலூர் நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ மானியம்.

·         வேலூர் மாவட்டத்தில் 2025-26 ம் நிதியாண்டில்   கிராமப் புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு ) நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ   50% மானியம்   வழங்கும் திட்ட த்தில் பயனடைய   விரும்பும்   நபர்கள் அருகாமையிலுள்ள கால்நடை   மருந்தக , கால்நடை உதவி மருத்துவரை அணு கி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                   வேலூர் மாவட்டத்தில் , 2025-26- ம் நிதியாண்டில்   கிராமப் புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு ) நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ 50% மானியம் ( ரூ .1,65,625/-) வழங்கும் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விவரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது . v நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை   கட்டுமானச் செலவு , உபகரணங்கள் வாங்கும் செலவு   ( தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு ), மற்றும்   4 மாதங்களுக்கு   தேவையான தீவன செலவு ( கோழி வளரும...