• வேலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் சிறப்பு முகாம்.


 ·        வேலூர் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு துணை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி சேர்க்கைக்காக குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற  சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு,  மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

                பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 100 சதவீதம் உயர்கல்வி என்ற இலக்குடன் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

                இதன் மூலம் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பல்வேறு தொழில் பாதைகள் சேர்க்கை செயல்முறைகள் பற்றிய தகவல்கள், கல்வி கடன்களை பெறுதல் மற்றும் தனித்துவமிக்க ஆலோசனைகள் வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

                வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி அடையாத 1120 மாணவர்கள் மற்றும் தேர்விற்கு வருகைபுரியாத 157 மாணவர்களில் 94 மாணவர்கள் என மொத்தம் 1214 பேர் துணைதேர்வு எழுதினர்.

                இவர்களில் 764 தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், தேர்ச்சி அடையாத மாணவர்கள் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்க்கை நடக்கும் பொருட்டு சிறப்பு உயர்க்கல்வி சேர்க்கை கல்வி முகாம் நடத்தப்பட்டது.

                குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கீ.வ.குப்பம் மற்றும் அணைக்கட்டு ஒன்றியங்களை சார்ந்த 367 மாணவர்களுக்கு குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலை பள்ளிலும், காட்பாடி, வேலூர் நகரம், வேலூர் புறநகர் மற்றும் கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த 397 மாணவர்களுக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் என மொத்தம் 764 மாணவர்களுக்கு சிறப்பு உயர்கல்வி சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

                அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு துணை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி சேர்க்கைக்காக குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.  

                ம்முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன், நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், நகர்மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.