• குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவிகள்
· குடியாத்தம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடனுதவி மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 11,782 பயனாளிகளுக்கு ரூ.145.22 கோடி மதிப்பில் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக பகுதியிலுள்ள 1,588 பயனாளிகளுக்கு ரூ.19.98 கோடி மதிப்பில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் 25.06.2025 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வேலூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,01,588 பயனாளிகளுக்கு ரூ.528.82 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா, மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள், கூட்டுறவு கடன் என நலதிட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 22.07.2025 அன்று காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1336 பயனாளிகளுக்கு ரூ.22.48 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து குடியாத்தம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடனுதவி மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 11,782 பயனாளிகளுக்கு ரூ.145.22 கோடி மதிப்பில் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக பகுதியிலுள்ள 1,588 பயனாளிகளுக்கு ரூ.19.98 கோடி மதிப்பில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஜே.எஸ். மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நலத்திட்ட உதவிகள் விவரம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 2,070 பயனாளிகளுக்கு ரூ.16,56,00,000/- மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களும், மகளிர் திட்டம் சார்பில் 410 பயனாளிகளுக்கு சுய உதவி குழு வங்கி கடன் இணைப்பு (ஊரகம்) ரூ.39,21,39,407/- மதிப்பிலும், 162 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு வங்கி கடன் இணைப்பு (நகர்ப்புறம்) ரூ.14,57,00,000/- மதிப்பிலும், 3 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.4,50,000/- மதிப்பிலும், DDU-GKY திட்டத்தின்கீழ் 1 பயிற்சியாளருக்கு சான்றிதழ்களும், RSETI திட்டத்தின்கீழ் 35 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் 2025-26ஆம் ஆண்டில் 553 பயனாளிகளுக்கு ரூ.19,35,50,000/- மதிப்பிலும், 2024-25ஆம் ஆண்டில் 409 பயனாளிகளுக்கு ரூ.14,31,50,000/- மதிப்பிலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2024-25ன் கீழ் 54 பயனாளிகளுக்கு ரூ.1,29,60,000/- மதிப்பிலும், பி.எம்.ஜென்மேன் திட்டம் 2024-25ன்கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.1,06,47,000/- மதிப்பிலும், திடக்கழிவு மேலாண்மை கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 252 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ரூ.1,36,000/- மதிப்பிலான சீருடைகளும், 86 துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ரூ.6,45,000/- மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களும்,
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவியாக 20 பயனாளிகளுக்கு ரூ.21,52,500/- மதிப்பிலும், 1,249 பயனாளிகளுக்கு ரூ.12,49,00,000/- மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ.2,69,360/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் புதிய உறுப்பினர் அடையாள அட்டை 4 நபர்களுக்கும், கிறித்துவ தேவாலய உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய புதிய உறுப்பினர் அடையாள அட்டை 7 நபர்களுக்கும், 56 பயனாளிகளுக்கு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின்கீழ் ரூ.5,60,000/- மதிப்பிலும், 4 பயனாளிகளுக்கு கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின்கீழ் ரூ.40,000/- மதிப்பிலும், 30 பயனாளிகளுக்கு ரூ.1,69,020/- விலையில்லா தையல் இயந்திரங்களும்,
வேளாண்மை உழவர் நல துறையின் சார்பில் மானாவாரி நில மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின்கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.30,10,000/- மதிப்பிலும், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 80 பயனாளிகளுக்கு ரூ.17,60,000/- மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1,269 பயனாளிகளுக்கு துளி நீரில் அதிக பயிர் திட்டத்தின்கீழ் ரூ.8,77,44,000/- மதிப்பிலும், 193 பயனாளிகளுக்கு ரூ.86,850/- மதிப்பிலான மாடி தோட்ட தொகுப்புகளும், 75 பயனாளிகளுக்கு ரூ.6,24,000/-மதிப்பிலான பரப்பு விரிவாக்கம் தென்னைகளும், 2203 பயனாளிகளுக்கு ரூ.1,06,01,290/- மதிப்பிலான பரப்பு விரிவாக்கம் பழப்பயிர் (ம) காய்கறிகளும், ரூ.34,00,000/- மதிப்பிலான 23 சிப்பம் கட்டும் அறைகளும்,
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.3,06,65,000/- மதிப்பிலான சுய உதவி குழு கடன்களும், 700 பயனாளிகளுக்கு ரூ.5,74,13,300/- மதிப்பிலான பயிர் கடன்களும், 268 பயனாளிகளுக்கு ரூ.1,38,79,600/- மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்களும், மாவட்ட சமூக நல துறையின் சார்பில் முதலமைச்சரின் இரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 44 பயனாளிகளுக்கு ரூ.11,00,000/- மதிப்பிலும், 66 பயனாளிகளுக்கு அனைத்து திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.63,91,100/- மதிப்பிலும், 85 பயனாளிகளுக்கு ரூ.8,50,000/- மதிப்பில் சத்தியாவானி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்களும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.1,80,000/- மதிப்பிலும்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 86 பயனாளிகளுக்கு ரூ.87,54,800/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 35 பயனாளிகளுக்கு ரூ.23,62,500/- மதிப்பிலான செயற்கை அவையங்களும், 112 பயனாளிகளுக்கு மாற்று திறனாளிக்கான நலவாரியத்தின் மூலம் ரூ.24,72,600/- மதிப்பிலும், 64 பயனாளிகளுக்கு ரூ.4,37,760/- மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும், 36 பயனாளிகளுக்கு ரூ.1,18,260/- மதிப்பிலான காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவிகளும், 15 பயனாளிகளுக்கு ரூ.15,90,000/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், 15 பயனாளிகளுக்கு மாற்று திறனாளிகளுக்கான திருமண நிதி திட்டத்தின்கீழ் ரூ.4,25,000/- மதிப்பில் தங்க நாணயங்களும்,
தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா திட்டத்தின்கீழ் ரூ.50,000/- மதிப்பிலும், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜ்னா திட்டத்தின்கீழ் ரூ.6,00,000/- மதிப்பிலும், 10 தூய்மை பணியாளர்களுக்கு மின்னணு அடையாள அட்டைகளும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.2,16,39,918/- மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கும், 96 பயனாளிகளுக்கு விவசாய அடையாள அட்டைகளும்,
கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 150 பயனாளிகளுக்கு ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.2,40,000/- மதிப்பிலான கோழி குஞ்சுகளும், 150 பயனாளிகளுக்கு பெண்களை தொழில்முனைவோர் ஆக்கும் திட்டத்தின்கீழ் ரூ.18,75,000/- மதிப்பிலும், 30 பயனாளிகளுக்கு பழத்தோட்டங்களில் பசுந்தீவனப்பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.90,000/- மதிப்பிலும், 60 பயனாளிகளுக்கு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.90,000/- மதிப்பிலும், 12 பயனாளிகளுக்கு ரூ.1,80,000/- மதிப்பிலான மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளும்,
தொழிலாளர் நலத்துறையின் மூலம் 130 பயனாளிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.2,63,400/-யும், திருமண உதவி தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ.1,00,000/-ம், இயற்கை மரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.1,65,000/-ம், ஓய்வூதியமாக 14 பயனாளிகளுக்கு ரூ.16,800/- என மொத்தம் 11782 பயனாளிகளுக்கு ரூ.145,22,44,465/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜூன் மாதம் வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபொழுது 18,000 பட்டாக்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் 12 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கி, பட்டா வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களின் சார்பில் முதலமைச்சர் முதலமைச்சர் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடம் வழங்கிய மனுக்கள் மற்றும் அரசின் சார்பில் நடத்தப்படும் முகாம்களில் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் பயன்கள் பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக அனைத்து துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் குடியாத்தம் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கான கிராமப்புற பகுதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மட்டும் 1,588 பயனாளிகளுக்கு சுமார் 19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தற்போது வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை உருவாக்கி பொதுமக்கள் இருக்கும் பகுதிகளிலேயே முகாம் அமைத்து, அம்முகாம்களில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் சார்பில் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் சார்பில் 43 சேவைகளும் மனுக்கள் பெறப்பட்டு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது.
அதேபோன்று பொதுமக்களுக்கு தரமான சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அவர்களது பகுதியிலேயே வழங்கும் விதமாக நலம் காக்கும் ஸ்டாலின் எனும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். இத்திட்டமானது வருகின்ற சனிக்கிழமை அன்று தொடங்கப்பட உள்ளது. நம்முடைய வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இத்திட்டம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் 16 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இதயம், சிறுநீரகம் போன்ற சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளது. இம்முகாம்களில் பொது மக்களுக்கு தேவையான எக்ஸ்ரே, இசிஜி, ரத்த பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து அறிந்து கொண்டு அம்முகாம்களுக்கு சென்று பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணமூர்த்தி, உத்தரகுமாரி செல்வம், ஆனந்தி முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு, ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி பிச்சாண்டி, நெல்லூர்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாயகி, குடியாத்தம் வட்டாட்சியர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment