• வெட்டுவானம் கிராம மக்கள் கோரிக்கை.
· வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சிறிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வேலூர் மாவட்டம், வெட்டுவானம், அம்பேத்கர் நகர் மக்கள் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், சுமார் 2,500 குடும்பங்கள் சுற்று வட்டார கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெட்டுவானம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காரணம் நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளது. ஆகவே சிறிய மேம்பாலம் அமைத்து தந்து மக்கள் சாலையை கடக்க உதவி புரிய வேண்டும். ஏற்கனவே மேம்பால சாலையை கடக்க முயன்ற 3 கிராம மக்கள் பலியாகியுள்ளனர். பலர் விபத்தில் கை, கால்களை இழந்துள்ளனர். எனவே சிறிய மேம்பாலம் ஒன்றை அமைத்து சாலையை கடக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும், மேலும் பெரிய பாலம் மூன்று கிலோமீட்டர் அளவு தூரம் உள்ளதால் சுற்றி வருவதில் சிரமம் உள்ளது. ஆகவே எங்களின் வெட்டுவானம் அருகில் சிறிய பாலம் அமைத்து தர வேண்டுமென மக்கள் மனுவில் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment