• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

·        வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 432  கோரிக்கை மனுக்களை பெற்றார். 

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நலத்துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 432 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறை தீர்வு நாள் கூட்டத்தில் படைவீரர் கொடி நாள் 2022-ஆம் ஆண்டில் கொடி நாள் நிதி ரூபாய் 3 இலட்சத்திற்கு மேல் வசூல் புரிந்த அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் திருகுணஐயப்பத்துரை (கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர்) ரூ.4,24,210/-யும், ஜி.இலட்சுமணன் (வேலூர் மாநகராட்சி ஆணையர்) ரூ.3,00,000/-யும்,  என்.ரமேஷ் (வேலூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்) ரூ.3,00,000/-யும் கொடி நாள் நிதியை வசூல் செய்துள்ளனர்.

 மேலும் வேலூர் மாவட்டத்தில் போதை பொருள்  இல்லாத தமிழ்நாடு குறித்து சிறப்பாக செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மற்றும் கல்லூரிகளை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகைகளை வழங்கினார். முதல் பரிசு முத்துரங்கம் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.15,000/-யும், இரண்டாம் பரிசு பள்ளத்தூர் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு ரூ.10,000/-யும், மூன்றாம் பரிசு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளிக்கு ரூ.5,000/-யும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்-2025 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள துண்டு பிரச்சுரத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று திறனாளிகளுக்கான திருமண உதவி தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு  தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் தலா ரூ.25,000/-க்கான காசோலை, 1 மாற்று திறனாளிக்கு ரூ.1,85,300/- மதிப்பிலான செயற்கை காலினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கௌசல்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.