• ஆடிப்பூரம் அம்மனுக்கு தீர்த்தவாரி.
· ஆடிப்பூரம் அம்மனுக்கு தீர்த்தவாரி.
· அம்மனுக்கு அபிஷேகம், வளையல்களால் அலங்காரம்
\ · திரளான பக்தர்கள் தரிசனம்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 19-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
கடைசி நாளான 10-ஆம் நாள் பிரம்மோற்சவத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் உற்சவர் சிலை மேளதாளங்கள் முழங்க ஆலய குளக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து அகிலாண்டீஸ்வரி அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். பின்னர் வளையல்களால் அலங்காரம் செய்து லட்சார்ச்சணை நடைபெற்று தீபாராதனைகளும் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment