• மாணவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்
· மாணவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்
· பெற்றோர்கள் கூறுவதை அறிவுரையாக கருதாமல் அவர்களின் அனுபவமாக கருதி நல்லொழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
· காட்பாடி குடிமையியல் முதன்மை நீதிபதி பிரேம்ஆனந்த் பேச்சு
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் ஹரிகோபாலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பள்ளி துணைதலைவர் மருத்துவர் ஜார்ஜ்அரவிந்த், மற்றும் பள்ளி நிர்வாகி தங்கபிரகாசம் உள்ளிட்டோரும் திரளான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி குடிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி பிரேம்ஆனந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் காட்பாடி குடிமையியல் முதன்மை நீதிபதி பிரேம்ஆனந்த் பேசுகையில்,
இன்றைய கால மாணவர்களுக்கு பெற்றோர்கள் பல நல்ல கருத்துக்களை கூறுவார்கள். அவைகளை அறிவுரைகளாக கருதாமல் அவர்களின் அனுபவமாக கருத வேண்டும்.
வாழ்க்கையில் நீங்கள் எந்த துறையானாலும் மருத்துவம், நீதித்துறை, ஆசிரியர் பணி என எதற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் நல்லொழுக்கத்தையும், கடமையுணர்வுடனும் செயல்பட வேண்டும். சச்சின் தனது 40 வயது வரையில் கிரிக்கெட் விளையாடி பல சாதனைகளை செய்தார். ஆனால் அவருடன் இந்திய அணியில் சேர்ந்த வினோத் காம்ப்ளியின் நிலை என்ன என அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லொழுக்கத்துடன் இருக்க வேண்டுமென பேசினார்.
Comments
Post a Comment