Posts

Showing posts from August, 2025

பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல்

Image
         பி . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் சங்கத்தின் தொடக்க விழா ·   மின் மின்னணுவியல் மற்றும் அதன் பயன்பாடு குறித்த கருத்தரங்கு     காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் பிரதான சாலையில் ஊவேரி சத்திரம் அருகே பி . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது .   இக்கல்லூரியில் அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான பொன் . 🏜️ அவர்களின் சீரிய தலைமையில் அரங்காவலர்கள் முன்னால் மாவட்ட ஆட்சியர் வி . சந்திரசேகரன் , முன்னாள் மாவட்ட நீதிபதி . எஸ் . சாத்த பிள்ளை , மருத்துவர் ஆர் . கண்ணையன் , திருமதி எஸ் . ரேணுகா , பொறியாளர் எச் . வெங்கடேஷ் , முனைவர் பி . அரிஸ்டாட்டில் , திரு எம் . ராஜேந்திரன் மற்றும் . எம் . என் . விஜயசுந்தரம் ஆகியோரின் சிறப்பான ஒத்துழைப்பினாலும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றது .   கல்லூரி இயக்குனர் டாக்டர் எம் . அருளரசு அவர்களின் நெறியாள்கையில் அறி...

• குடியாத்தம் பகுதியில் தேசிய கைத்தறி தினவிழா.

·         வேலூர் மாவட்ட   நிர்வாகம் மற்றும் கைத்தறித் துறை இணைந்து நடத்தும்  11- வது தேசிய கைத்தறி தினவிழா குடியாத்தம் பகுதியில் உள்ள பத்மசாலிய பஹுத்துவ திருமண மண்டபத்தில் 07.08.20 25 அன்று நடைபெ ற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். 1905- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7- ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது .   தமிழ்நாட்டில் 11 வது தேசிய கைத்தறி நாளினை 07.08.2025 அன்று கைத்தறி தொழிலினை போற்றும் வகையிலும் , கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும் கொண்டாடப்படவுள்ளது . இதன்படி வேலூர் மாவட்டத்தில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறி துறை இணைந்து நடத்தும...

• வேலூர் கரும்பு விவசாயிகளுக்கான அரசின் சிறப்பு ஊக்கத்தொகை.

·         வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான அரசின் சிறப்பு ஊக்கத்தொகை நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.  வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 கரும்பு அரவைப்பருவத்தில் வேலூர் மாவட்டத்தில் 876 அங்கத்தினர் மூலம் 44023.195 டன்கள் சப்ளை செய்யப்பட்டது. கரும்பு சப்ளை செய்த அனைத்து அங்கத்தினர்களுக்கும் டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ. 349 வழங்க அரசாணை மூலம் ஆணையிடப்பட்டு மொத்தம். ரூ. 1.53 கோடி 31.07.2025 அன்று அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அரசாங்கத்தின் மூலம் வரவு வைக்கப்பட்டது. மேலும் இந்த நடவு பருவத்தில் அகல பார் அமைத்து கரும்பு பரு சீவல் நாற்று மூலம் நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு மாநில அரசின் மானியமாக ரூ. 18625 எக்டருக்கு வழங்கவும் அகல பார் அமைத்து ஒரு பரு கரணை மூலம் நடவு செய்ய ரூ. 8000 எக்டருக்கு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் PM-RKVY மற்றும் KAVIADP திட்டங்கள் மூலம் பருசீவல் நாற்று நடவு செய்யும் அங்கத்தினர்க ளுக்கு ரூ. 1562...

• வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
  ·         வேலூர்   மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட   வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் 445   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவிதொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சாரத்துறை சார்பான குறைகள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 445 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்க...

• சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.

Image
 ·          அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கையில் கடலை செடிகள் வாழை கண்ணு , மஞ்சள் உள்ளிட்டவைகளுடன் வந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு                 வேலூர் மாவட்டம் , காட்பாடி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு முயன்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் தாதிரெட்டிப்பள்ளி , அம்மவார்பள்ளி , பாலமத்தூர் , மகிமண்டலம் ஆகிய கிராமங்களில் இந்த சிப்காட்டிற்காக விவசாயிகளின் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சி தற்போது துவங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் அத்துமீறி விளை நிலங்களில் புகுந்து நிலங்களை அளவீடு செய்வது மரங்களை கணக்கெடுப்பது விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்களது நிலங்களை அளப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள்.       விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சிப்காட் அமைக்க உங்கள் நி...

• வேலூரில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் பட்டங்கள் வழங்கல்.

Image
·          வேலூரில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கல்.                 வேலூர் மாவட்டம் , தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் கர்நாடகாவை சேர்ந்த 8 சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த 4 சிறைத்துறை அதிகாரிகள் என மொத்தம் 12 அதிகாரிகள் மூன்று மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். இதில் கைதியை கையாளுதல், குற்றவியல் சட்டங்கள், சிறை அதிநவீன தொலை தொடர்பு கருவிகளின் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.        இதன் பயிற்சி நிறைவு விழாவானது சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், சான்றுகளை வழங்கினார். இவ்விழாவில் திரளான சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.         நீங்கள் குற்றவியல் ...