• குடியாத்தம் பகுதியில் தேசிய கைத்தறி தினவிழா.
· வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறித் துறை இணைந்து நடத்தும் 11-வது தேசிய கைத்தறி தினவிழா குடியாத்தம் பகுதியில் உள்ள பத்மசாலிய பஹுத்துவ திருமண மண்டபத்தில் 07.08.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் 11வது தேசிய கைத்தறி நாளினை 07.08.2025 அன்று கைத்தறி தொழிலினை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும் கொண்டாடப்படவுள்ளது.
இதன்படி வேலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறி துறை இணைந்து நடத்தும் 11-வது தேசிய கைத்தறி தினவிழா குடியாத்தம் பகுதியில் உள்ள பத்மசாலிய பஹுத்துவ திருமணமண்டபத்தில் 07.08.2025 அன்று நடைபெற உள்ளது.
இத்தேசிய கைத்தறி தினவிழாவினை முன்னிட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் நெசவாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், குடியாத்தம் பகுதியிலுள்ள நெசவாளர்களின் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புடன் நடத்தப்படவுள்ளது.
Comments
Post a Comment