பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல்

  

    பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் சங்கத்தின் தொடக்க விழா

  • · மின் மின்னணுவியல் மற்றும் அதன் பயன்பாடு குறித்த கருத்தரங்கு

 


 

காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் பிரதான சாலையில் ஊவேரி சத்திரம் அருகே பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது.

 இக்கல்லூரியில் அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான பொன்.கலையரசன் அவர்களின் சீரிய தலைமையில் அரங்காவலர்கள் முன்னால் மாவட்ட ஆட்சியர் வி.சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட நீதிபதி.எஸ்.சாத்த பிள்ளை, மருத்துவர் ஆர்.கண்ணையன், திருமதி எஸ்.ரேணுகா, பொறியாளர் எச்.வெங்கடேஷ், முனைவர் பி.அரிஸ்டாட்டில், திரு எம்.ராஜேந்திரன் மற்றும். எம்.என்.விஜயசுந்தரம் ஆகியோரின் சிறப்பான ஒத்துழைப்பினாலும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றது.

 கல்லூரி இயக்குனர் டாக்டர் எம்.அருளரசு அவர்களின் நெறியாள்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது.

 இதன் இன்னொரு பரிமாணமாக மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை சார்பாக மின் மற்றும் மின்னனு பொறியியல் சங்கத்தின் தொடக்க விழா மற்றும் மின்  மின்னணுவியல் மற்றும் அதன் பயன்பாடு குறித்த கருத்தரங்கு சிறப்பாக நடத்தப்பட்டது .

 இந்த கருத்தரங்கில் சிறப்பு வள நபராக(resource person) மதிப்பிற்குரிய பேராசிரியர் டாக்டர் ஜி.அருண்குமார்,எரிசக்தி மற்றும் மின் மின்னணுவியல் துறை, விஐடி ,வேலூர். அவர்கள் சிறப்பான மற்றும் தெளிவான மின் மின்னணுவியல் பற்றிய கருத்துகளை  மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 முன்னதாக துவக்க நிகழ்ச்சியில் துறைத்தலைவர் டாக்டர் கே. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை வழங்க கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பழனிசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

  இந்நிகழ்வில் அனைத்து துறை தலைவர்கள் ,பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.