• கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவி.
· கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7132 பயனாளிகளுக்கு ரூ.79.16 கோடி மதிப்பில் அரசு துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக 1801 பயனாளிகளுக்கு ரூ.25.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை நீர்வள துறை அமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 25.06.2025 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வேலூர் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,01,588 பயனாளிகளுக்கு ரூ.528.82 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா, மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள், கூட்டுறவு கடன் என நலதிட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக 22.07.2025 அன்று காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,336 பயனாளிகளுக்கு ரூ.22.48 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7132 பயனாளிகளுக்கு ரூ.79.16 கோடி மதிப்பில் அரசு துறைகளின் சார்பில் வீட்டுமனை பட்டா, கூட்டுறவு வங்கி கடனுதவி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக 1,801 பயனாளிகளுக்கு ரூ.25.29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கீ.வ.குப்பம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் விவரம்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 1,670 பயனாளிகளுக்கு ரூ.13,36,00,000/- மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களும், மகளிர் திட்டம் சார்பில் 118 பயனாளிகளுக்கு சுய உதவி குழு வங்கி கடன் இணைப்பு (ஊரகம்) ரூ.10,70,00,000/- மதிப்பிலும், 16 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.24,00,000/- மதிப்பிலும், DDU-GKY திட்டத்தின்கீழ் 1 பயிற்சியாளருக்கு சான்றிதழ்களும், RSETI திட்டத்தின்கீழ் 35 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் 2025-26 ஆம் ஆண்டில் 781 பயனாளிகளுக்கு ரூ.27,33,50,000/- மதிப்பிலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) 2024-25ன்கீழ் 130 பயனாளிகளுக்கு ரூ.3,12,00,000/- மதிப்பிலும், பி.எம்.ஜென்மேன் திட்டம் 2023-24ன்கீழ் 75 பயனாளிகளுக்கு ரூ.3,80,25,000/- மதிப்பிலும், பி.எம்.ஜென்மேன் திட்டம் 2024-25ன்கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.50,70,000/- மதிப்பிலும், திடக்கழிவு மேலாண்மை கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 475 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ரூ.26,12,500/- மதிப்பிலான சீருடைகளும், 200 துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ரூ.15,00,000/- மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களும்,
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 257 பயனாளிகளுக்கு ரூ.2.57,00,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.43,680/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், கிறித்துவ தேவாலய உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய புதிய உறுப்பினர் அடையாள அட்டை 1 நபருக்கும், 1 நபருக்கு சீர்மரபினர் நல வாரிய புதிய உறுப்பினர் அட்டையும், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மானாவாரி நில மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் 80 பயனாளிகளுக்கு ரூ.24,08,000/- மதிப்பிலும், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.11,70,000/- மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 588 பயனாளிகளுக்கு துளிநீரில் அதிக பயிர் திட்டத்தின்கீழ் ரூ.2,17,99,000/- மதிப்பிலும், 71 பயனாளிகளுக்கு ரூ.3,19,500/-மதிப்பிலான பழச்செடி தொகுப்புகளும், 20 பயனாளிகளுக்கு ரூ.1,68,000/-மதிப்பிலான பரப்பு விரிவாக்கம் தென்னைகளும், 502 பயனாளிகளுக்கு ரூ.49,51,000/- மதிப்பிலான பரப்பு விரிவாக்கம் பழப்பயிர் (ம) காய்கறிகளும், ரூ6,00,000/- மதிப்பிலான 3 சிப்பம் கட்டும் அறைகளும்,
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 342 பயனாளிகளுக்கு ரூ.3,98,52,990/- மதிப்பிலான சுய உதவிக்குழு கடன்களும், 349 பயனாளிகளுக்கு ரூ.3,11,32,070/- மதிப்பிலான பயிர்க்கடன்களும், 566 பயனாளிகளுக்கு ரூ.3,80,86,800/- மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்களும், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரு பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.2,00,000/- மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு அனைத்து திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.8,36,800/- மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு ரூ.80,000/- மதிப்பில் சத்தியாவானி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்களும்,
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 62 பயனாளிகளுக்கு ரூ.63,11,600/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 26 பயனாளிகளுக்கு ரூ.1,75,000/- மதிப்பிலான செயற்கை அவையங்களும், 78 பயனாளிகளுக்கு மாற்று திறனாளிக்கான நல வாரியத்தின் மூலம் ரூ.14,19,400/- மதிப்பிலும், 45 பயனாளிகளுக்கு ரூ.3,07,800/- மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும், 45 பயனாளிகளுக்கு ரூ.1,47,825/- மதிப்பிலான காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவிகளும், 11 பயனாளிகளுக்கு ரூ.11,66,000/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், 8 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதி திட்டத்தின்கீழ் ரூ.2,50,000/- மதிப்பில் தங்க நாணயங்களும்,
தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.50,000/- மதிப்பிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் தொழில் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.25,00,000/- மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 94 பயனாளிகளுக்கு ரூ.1,51,87,031/- மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் 48 பயனாளிகளுக்கு விவசாய அடையாள அட்டைகளும்,
கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 40 நாட்டின கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.1,60,000/- மதிப்பிலான கோழி குஞ்சுகளும், கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்தின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.1,50,000/- மதிப்பிலும், 100 பயனாளிகளுக்கு பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின்கீழ் ரூ.12,50,000/- மதிப்பிலும், 14 பயனாளிகளுக்கு பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.42,000/- மதிப்பிலும், 44 பயனாளிகளுக்கு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.66,000/- மதிப்பிலும், 7 பயனாளிகளுக்கு ரூ.1,05,000/- மதிப்பிலான மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளும்,
தொழிலாளர் நலத்துறையின் மூலம் 55 பயனாளிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,16,800/-யும், திருமண உதவி தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ.80,000/-யும், இயற்கை மரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.55,000/-யும், ஓய்வூதியமாக 6 பயனாளிகளுக்கு ரூ.7,200/-யும் என மொத்தம் 7132 பயனாளிகளுக்கு ரூ.79,16,51,996/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது.
அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் சில நேரங்களில் பொதுமக்களை முழுமையாக சென்றடைவதில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சர் அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களை தேடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களோடு நீண்ட காலம் பயணித்திருக்கிறேன். திட்டங்களை தீட்டுவதில் அவருக்கு நிகரானவர் எவரும் இல்லை. அவரைப் போலவே நம்முடைய முதல்வரும் மக்கள் கேட்காமலேயே அவர்களுக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். நாள்தோறும் அவருக்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உண்டு. நடை பயிற்சி முடித்து விட்ட பிறகு எங்களைப் போன்ற மூத்த அமைச்சர்களுக்கு தொலைபேசியில் அழைத்தால் அன்றைய தினம் ஏதோ ஒரு புதிய திட்டம் குறித்து அறிவிக்கப் போகிறார் என்று அர்த்தம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நான் கண்டு வியந்த திட்டங்களில் ஒன்று காலை பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குதல். இத்திட்டத்தை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் பின்பற்றும் நிலையில் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்துகூட அந்நாட்டின் பிரதிநிதிகள் இங்கு வந்து இத்திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு அவர்களுடைய நாட்டில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
இது மட்டுமின்றி தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கி வருகிறார். அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முறையே புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். திட்டங்களை எப்படி உருவாக்குவது என்பதை நான் படித்திருக்கிறேன். ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பதை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன்.
பொதுமக்கள் தங்களுடைய குறைகளுக்காக அரசு அலுவலர்களை அரசு அலுவலகங்களுக்கு தேடிச் சென்று பார்த்து வழங்கி வந்த நிலையை மாற்றி பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு அனைத்து துறை அலுவலர்களையும் வரவழைத்து முகாம் அமைத்து, அவர்களுக்கான கோரிக்கைகளை முடிந்தவரை அன்றைய தினமே தீர்வு காண்பது அல்லது அடுத்த 45 நாட்களுக்குள் தீர்வு கண்டு அதன் பலன்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் எனும் ஒரு அருமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர்-டம் வழங்கும் மனுக்களை பிரித்து சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே 400 நபர்களைக் கொண்ட ஒரு மையம் சென்னையில் இந்தியா ஆட்சிப் பணி அலுவலர் ஒருவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று பொதுமக்களின் மனுக்களின்மீது தீர்வு காண்பதற்காக ஒரு தனி துறையை உருவாக்கி செயல்படுத்திய முதல்வர் இந்தியாவிலேயே எங்கும் கிடையாது.
ஏழை, எளிய மக்களுக்கும் தரமான உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் 17 சிறப்பு சிகிச்சைகள் கொண்ட நலம் காக்கும் ஸ்டாலின் எனும் ஒரு புதிய திட்டத்தை இன்றைய தினம் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இதயம் தொடர்பான ECO, ECG ஸ்கேன் செய்யும் வசதிகள் உள்ளிட்ட உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. கீ.வ.குப்பம் பகுதியில் பனைமடங்கி கிராமத்தில் வருகின்ற 30.08.2025 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு சிரமமின்றி அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, கீ.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிசந்திரன், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணைமேயர் மா.சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அசோக்குமார், கவிதா சுதாசேகர், ஒன்றிய குழு துணைதலைவர் பாரதி வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீதாராமன், ஜெயமுருகேசன், விஜயலட்சுமி முருகன், கீ.வ.குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா சரவணன், கீ.வ.குப்பம் வட்டாட்சியர் பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment