• வேலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பேச்சு.
· தமிழகத்தில் கல்வியும் சுகாதாரமும் இரண்டு கண்கள் என முதல்வர் கூறுகிறார் - ஆனால் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளது
· வேலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூரில் பாமக சார்பில் உரிமை மீட்பு பயணம் வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பாமக பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ரவி ஜெகன், இளவழகன், சரவணன், முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறிவிப்புகள் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழக முதல்வர் இந்த அரசுக்கு கல்வி துறையும், சுகாதார துறையும் இரு கண்கள் என பேசுகிறார். ஆனால் மாநிலம் முழுவதும் கல்வி துறையில் ஒரு லட்சம் வகுப்பறைகளுக்கு ஆசிரியர்களே கிடையாது. சுமார் 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்பாமல் அரசு அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளது. அதிலும் 2500 ஆசிரியர்கள் நியமிப்போம் என அறிவித்ததோடு சரி. இதனால் கல்வி துறை சீரழிந்து வருகிறது. உயர் கல்வி துறை முழுமையாக சீரழிக்கப்பட்டுவிட்டது.
இதேபோல்தான் மருத்துவ துறையும் முழுமையாக மக்களுக்கு பயன்படவில்லை.
வரும் 2026 தேர்தலில் பணக்கட்டுகளுடன் உங்களை சந்திக்க வருகிறார்கள். இதற்கெல்லாம் நீங்கள் அடிபணியாமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். உங்கள் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் நீர்வள துறை அமைச்சராக இருந்தும் பாலாற்றில் தடுப்பணைகளையே அமைக்கவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தினால் அதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை என தட்டி கழிக்கிறது தமிழக அரசு. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது வேலூர்தான். இங்கிருந்துதான் ஆட்சி மாற்றம் துவங்க வேண்டும் என்று பேசினார்.
Comments
Post a Comment