• வேலூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்.

·        "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம்.

·        சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து 

·        வேலூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை நீர்வள துறை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து  நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை அரசினர் மேல்நிலை பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்தார். 

இம்முகாமில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சார்ந்த 1,355 பொதுமக்கள் (மாலை 3 மணி நிலவரப்படி) கலந்து கொண்டு, தங்களுக்கான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இம்முகாமில் கலந்து கொண்ட 33 மாற்று திறனாளிகளில் 28 நபர்களுக்கு உடனடியாக மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவமான  அடையாள அட்டையும் (UDID), 5 நபர்களுக்கு  செயற்கை கால்களும் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர்.துரைமுருகன், தெரிவித்ததாவது.

            தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை அவர்களுடைய பகுதியிலேயே வழங்கும் வகையில் கடந்த மாதம் உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தை தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் அடுத்தப்படியாக பொதுமக்களுக்கு அவர்களுடைய பகுதிகளிலேயே உயர்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தை தொடங்கி உள்ளார்.         

                 இந்த உயர் சிறப்பு மருத்துவ முகாம்களை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதமும், வேலூர் மாநகராட்சியில் 3 முகாம்களும் ஆக மொத்தம் 24 முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

          இந்த “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம்களில்
17 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவைப்படின் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

                பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, மகப்பேறு மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம்,  இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம்,  மன நல மருத்துவம், இயன்முறை சிகிச்சை
( பிசியோதெரபி), ஊடுகதிர் மருத்துவம்(ரேடியலாஜி),  சுவாச மண்டலம் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் (ஆயுர் வேதம் /யோகா/யுனானி/ சித்தா/ஓமியோபதி) ஆகிய 17 சிறப்பு சிகிச்சைகளுக்கு இம்முகாம்களில் மருத்துவர்களின் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. எனவே நலம் காக்கும் ஸ்டாலின் உயர்சிறப்பு மருத்துவ முகாம் தங்கள் பகுதியில் நடைபெறும்போது பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளும்படி நிர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், வி.அமுலுவிஜயன், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், துணைமேயர் மா.சுனில்குமார், காட்பாடி ஒன்றிய குழு துணைதலைவர் எஸ்.சரவணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பரணிதரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கலைவாணி பாபு, ஒன்றிய குழு உறுப்பினர் சுஜாதா கருணாகரண், வள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி கோட்டீஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.இராணி நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.