• கல்வி கொள்ளை - AUT / TANTAAC ஆர்பாட்டம்.

·         கல்வி கொள்ளை - சமூகநீதி இட ஒதுக்கீட்டிற்கு வேட்டு - பேராசிரியர்கள் கொந்தளித்து AUT / TANTAAC ஆர்பாட்டம்.

  ·         தமிழக அரசு மசோதாவால் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவு சிதைவு.

      அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைகழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

               சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வரும் இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து பல்கலைகழக ஆசிரியர் சங்கம் (AUT) மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்கம் (TANTSAC) சார்பாக வேலூர், ஊரீசு கல்லூரி முன்பாக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                இச்சட்டம் உயர்கல்வி துறையில் தனியார் முதலாளிகளை ஊக்குவிப்பதாகவும், கல்வி கொள்ளையை ஊக்குவிப்பதாகவும், ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம் உயர்வுக்கு வழி வகுப்பதாகவும், சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டிற்கும் வேட்டு வைப்பதாகவும், ஏழை எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவை சிதைப்பதாகவும் ,

      அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், அலுவலர்களது பணி பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கும் நிலையில் இருப்பதால் இதனை பல்கலைகழக ஆசிரியர் சங்கம் (AUT) மற்றும் தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரிகள் அலுவலர்கள் சங்கம் (TANTSAC) வன்மையாக கண்டித்து கல்லூரியின் நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

                இதில் ஏராளமான பேராசிரியர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டனர் .

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• அறிவுத் தோட்டத்தின் 12 ஆண்டுகால சீரிய முயற்சி அங்கீகாரம்.

• மாணவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் சுற்றுலா.