• வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
· வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 381 கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,44,950/- மதிப்பிலான கைத்திறன் பேசிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவிதொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 381 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.14,495/- வீதம் பார்வையற்றோருக்கான பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட ரூ.1,44,950/- மதிப்பிலான கைத்திறன் பேசிகள், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் 1 மாற்று திறனாளிக்கு விற்பனை மையம் அமைக்க வங்கி கடனுதவி வழங்குவதற்கான பரிந்துரை ஆணையையும் வழங்கினார்.
முன்னதாக வேலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு, தேசிய நெடுஞ்சாலை) கௌசல்யா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment