• தாயுமானவர் திட்டம்.

  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் பொருட்களை வழங்கும் வகையில் “ நவம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என  மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப் 1) துறை நாள்.11.08.2025ன்படி மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு  அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியினை நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் மாதம் தோறும் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

                வேலூர் மாவட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் கொண்ட 33,245  குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

                2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்கும் வகையில் “நவம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில்” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.