• குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு எளிமையாக போதிப்பது பயிற்சி வகுப்பு.

·        குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு எளிமையாக போதிப்பது பயிற்சி வகுப்பு - நீர் மேலாண்மை திட்டத்தின் பெருந்தலைவர் கே.விஸ்வநாதன் பயிற்சி.

     வேலூர் மாவட்டம், வேலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வேலூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு குழந்தைகள் வளரும் மையத்தை உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கான யுக்திகளில் கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எப்படி குழந்தைகளுக்கு எளிமையாக போதிப்பது என்ற தன்மையில் 20 வருடங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பல  குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்த வகையில், பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தும் விதத்தில் குழந்தைகள் காப்பகம் மையத்தில்  ஆசிரியராக வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பெடுக்கப்பட்டது.

     இதில் வேலூர்  ஒருங்கிணைந்த குழந்தைகள் காப்பக அலுவலர் சாந்தலட்சுமி பயிற்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து காட்டுப்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தில் 15 ஆண்டுகள் தலைவராக இருந்து வழி நடத்தியவரும், பத்தாண்டுகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்து வழி நடத்தியவரும், ஐந்து ஆண்டுகள் வறட்சிக்கு இலக்காகும் திட்டத்தின் குறிப்பாக, நீர் மேலாண்மை திட்டத்தின் பெருந்தலைவர் ஆகவும் பொறுப்பு வகித்த மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் பொறுப்பு வகித்தவரும் கே.விஸ்வநாதன்  பயிற்சி  கொடுத்தார்.

          மேலும் இதில் விளையாட்டின் மூலம் குழந்தைகள் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவும், கடின உழைப்பின் மூலம்தான் வெற்றியை பெற முடியும் என்ற முறையிலும், குழுவாக இணைந்து செயல்படுவது, குழுவுக்கு தலைவராவது, வெற்றியும் தோல்வியும் சமமாக பாவிப்பது, தோல்வியில் இருந்து வெற்றியை அடைய முயற்சி செய்வது, நேரத்தை கச்சிதமாக பயன்படுத்துவது போன்ற 25 வகையான தலைமை பண்புகளை விளையாட்டின் மூலம் பெறுகின்ற தன்மையையும்,

            மேலும் உலக கதை சொல்லும் நாள் மார்ச் 20 என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கு கதை சொல்வதின் மூலம் கேள்வி கேட்கும் திறன், சொல்வளம் பெருகுதல், தர்க்கம் வளர்தல், நினைவாற்றல் பெருகுதல், பாசப்பிணைப்பு ஏற்படுதல், உறவு பலப்படுத்துதல், மொழிவளம் வளருதல் போன்ற 30-க்கும் மேற்பட்ட திறமைகளை குழந்தைகள் வளர்த்துக் கொள்கின்றனர் என்ற தன்மையிலும்,

              பாடல்கள் மூலம் குழந்தைகள் நினைவாற்றலையும், இசைத்திறனையும், ஆடிக்கொண்டு பாடுவதினால் பரதநாட்டியத்தையும், யோகாவையும், உடல் மொழியையும், குரல் வளத்தையும் குழந்தைகள் பெறுகின்ற தன்மையை, “இசைக் கருவிகள் கற்போம் வாழ்வை இனிமையாக்குவோம்” என்ற தன்மையில் அறிவு கூர்மையை அதிகரித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, பொறுமையும் ஆக்கத்திறனும் கூட்டி, ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்ற நிலையில்  பயிற்சி கொடுக்கப்பட்டது.

            முன்னதாக தன்னை தயார்படுத்திக் கொண்டால்தான் ஆசிரியர்கள் பிறரை தயார்படுத்த முடியும். உயிரோடு வாழ்வதல்ல வாழ்க்கை, உயர்வோடு வாழ்வதுதான் வாழ்க்கை என்ற தன்மையில் ஆசிரியர்களுடைய தன்மையை விளக்கி ஆளுமை தன்மை  தத்துவங்களை கூறி  பயிற்சி கொடுக்கப்பட்டது.

            பயிற்சியை குழந்தை ஆசிரியர்கள் உற்சாகத்தோடு பயிற்சியில் மூழ்கிருந்தார்கள். ஆர்வத்தை காட்டினார்கள். கதை சொல்லுவதிலும் விளையாட்டை பெறுவதிலும், பாடல் பாடுவதின் தத்துவத்தையும் நேரடியாக பயிற்சியில் அனுபவம் பெற்றார்கள்.  பயிற்சி முடிவில் கற்றுக்கொண்ட திறன்களை வெளிப்படுத்தி உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.