• வேலூர் மாற்று திறனாளி மகன் திருமண உதவித்தொகை .
· மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் உறுப்பினர்களின் மகன் அல்லது மகளுக்கு வழங்கி வந்த திருமண உதவி தொகையை ரூ.2000/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல் பயனாளியாக வேலூர் அல்லாபுரத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி மகன் திருமண உதவித்தொகை ரூ.5000/-க்கான ஆணையினை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் உறுப்பினர்களின் மகன் அல்லது மகளுக்கு வழங்கி வந்த திருமண உதவி தொகையை ரூ.2000/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல் பயனாளியாக வேலூர் அல்லாபுரத்தை சார்ந்த மாற்று திறனாளி சாந்தி அவர்களின் மகன் திருமண உதவித்தொகை ரூ.5000/-க்கான ஆணையினை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
தமிழ்நாட்டில் மாற்று திறனாளிகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை அளிக்கும் வகையில் தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியம் 2007-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு வாரிய உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் மாற்று திறனாளிகள் உறுப்பினர்களின் அவர்களது மகன் / மகள் திருமணத்திற்கான உதவித்தொகை ரூ.2000/- ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க இத்திட்டத்திற்கான உதவிதொகை ரூ.2000/- லிருந்து ரூ.5000/-ஆக உயர்த்தி வழங்கிட உரிய அரசாணை நிலை எண்: 09 மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந -2.1) த் துறை நாள்: 24.06.2025 அன்று பெறப்பட்டது.
அதனடிப்படையில் இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் முதல் பயனாளியாக வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பம் செய்த ஏசுபாதம் கசம் (அ) காட்பாடி (வ) மற்றும் சாந்தி அல்லாபுரம் (அ) வேலூர் ஆகிய இரண்டு மாற்று தினாளிகளின் மகன் / மகள் திருமணத்திற்கான தொகை ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- வீதம் ஆக மொத்தம் ரூ.10000/-த்தினை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் ச.பாபு உடனிருந்தார்.

Comments
Post a Comment