• விஐடி உதவி துணைதலைவர் ஆதரவற்றோர்க்கு இனிப்பு, பட்டாசுகளை வழங்கல்.
· விஐடி உதவி துணைதலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பட்டாசுகளை வழங்கினார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு விஐடி பல்கலைகழகத்தின் உதவி துணைதலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன் மற்றும் டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் இனிப்பு, பட்டாசு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் உள்ள முதியோர் பாலர் குடும்ப கிராம பண்ணை ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளான விஐடி பல்கலைகழக உதவி துணைதலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோர் வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் முதியோர், குழந்தைகளுக்கு புத்தாடைகள் ஆகியவற்றை தானமாக வழங்கினர்.
அதை தொடர்ந்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து விஐடி பல்கலைகழகத்தின் உதவி துணைதலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் மற்றும் டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோர் 400-க்கும் மேற்பட்டோருக்கு உணவு பரிமாறினர்.
இந்நிகழ்வில் விஐடி பல்கலைகழக துணைதலைவர் சங்கர்விசுவநாதன் மற்றும் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment