• Q.S. உலக பல்கலைகழக தர வரிசையில் விஐடி பல்கலை 142-வது இடம்.
· Q.S. உலக பல்கலைகழக தர வரிசையில் விஐடி பல்கலை 142வது இடம்.
· அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவிதொகை
- விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்.
கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் ஸ்டார்ஸ் திட்டத்தில் 102 மாணவர்களுக்கு இலவச கல்வியும், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது என விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வி மூலம்தான் ஒரு நாடு வளர முடியும். இந்தியா வளர வேண்டும், தமிழகம் வளர வேண்டும்.
அந்த வகையில் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களை முன் மாதிரியாக மாற்ற வேண்டும் என்ற வகையில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க ஸ்டார்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. பட்டபடிப்பு முடித்த மாணவர்கள் தங்களின் பெற்றோர் பெறும் சம்பளத்தைவிட 10 முதல் 20 மடங்கு வரை சம்பாதிக்கின்றனர். சுமார் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர்.
இந்தியாவின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 28 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகள் 60 முதல் 100 சதவீதம் வரை உள்ளது. தமிழகம் 47 சதவீதமாக உள்ளது.
வட மாவட்டங்களில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது. பொருளாதாரம், கல்வியில் தங்கி இருக்கிறோம். இந்நிலையை கல்வியை வைத்துதான் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி வளர்ந்த நாடுகளில் மொத்த பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கும். தென்மாநிலங்கள் கல்வியில் முன்னேறியுள்ளன. ஆனால் பிகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய பெரிய மாநிலங்கள் மொத்த மாணவர் சேர்க்கை விகதத்தில் 28 சதவீதத்துக்கு கீழ் உள்ளது.
பள்ளி கல்வியில் கேரளா முதலிடம், தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. உயர்கல்வி துறையில் தமிழகம் முதலிடமும், கேரளா 2-ம் இடத்திலும் உள்ளது.
கல்வி வளர்ந்த இடத்தில் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது. கேரளாவைவிட பிகார் மாநிலம் பெரிய பரப்பளவையும், மக்கள் தொகையையும் கொண்டது. கேரளாவில் தனிநபர் வருமானம் 3800 டாலர்கள் ஆகும். பிகார் மாநிலத்தில் தனிநபர் வருமானம் 810 டாலர்கள் ஆகும்.
எனவே, எவ்வளவு பெரிய மாறுதலை கல்வி கொண்டு வரமுடியும் என்பது தெரிய வருறது.
இந்தியாவில் மொத்த 1200 பல்கலைகழங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 25,000 பல்கலைகழகங்கள் உள்ளன. உலகளவில் போட்டியிட்டு சாதித்து எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் விஐடி-யின் நோக்கம். விஐடிபல்கலைகழகத்தில் 4,000 பேர் பிஹெச்டி ஆய்வு படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறுஅவர்கூறினார்.
விஐடி துணைதலைவர் சேகர்விசுவநாதன் கூறும்போது, “விஐடி ஆராய்ச்சி துறையில் தனித்து விளங்குகிறது. 2024 ஷாங்காய் ஏஆர்டபிள்யூயு (ARWU) தர வரிசை பட்டியலில் இந்தியாவில் முதல் 2 இடங்களில் விஐடி வந்துள்ளது.
விஐடி பல்கலைகழகத்தில்தான் பிஹெச்டி படிப்பை இந்தியாவிலேயே அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை அளித்து வருகிறோம்.
அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய அளவில் வேலூர் விஐடி முதல் 5 இடத்தில் உள்ளது. வேலூர், சென்னை வளாகத்தில் பணிபுரியும் 90 பேராசிரியர்கள் உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகளாக உள்ளனர். உலகளவில் முதல் 2 சதவீத விஞ்ஞானிகளாக விஐடி பல்கலைகழகத்தில் சுமார் 101 பேராசியர்கள் பணிபுரிவது பெருமையாக உள்ளது. விஐடி பல்கலைகழகம் ஆராய்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம்.
க்யூஎஸ் (QS) :
உலக பல்கலைகழக தர வரிசையில் பொறியியல் தொழில்நுட்ப துறையில் விஐடி 142-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 9-ம் இடம் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் பாட பிரிவில் 110-வது இடத்திலும், டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாட பிரிவில் முதல் 100 இடத்தில் வந்துள்ளது.
தேசிய கல்வி நிறுவன தர வரிசை பட்டியலில் (NIRF), 2016 முதல் தொடர்ந்து வி.ஐ.டி வேலூரை நாட்டின் முதல் 20 பல்கலைகழகங்களில் ஒன்றாக தர வரிசைப்படுத்தி உள்ளது. நிகழாண்டில் பல்கலைகழக வரிசையில் 14-வது இடத்திலும், ஆராய்ச்சி வரிசையில் 14-வது இடத்திலும், பொறியியல் வரிசையில் 16-வது இடத்திலும், ஒட்டுமொத்த தர வரிசையில் 21-வது இடத்திலும்உள்ளது.
முக்கிய காரணம் கல்வித் தரத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். விஐடி-யில் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை.
செயற்கை நுண்ணறிவு வருகையால் வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்று கொண்டால் புதிய வேலைவாய்ப்புகளை பெறலாம்.
வேதியியல் பாட பிரிவில் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய பேராசிரியர் சூசுமுகிடகவா என்பவருடன் விஐடி பல்கலைகழக பேராசிரியர் தாமஸ்குமார்பான்டா ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
விஐடி துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் கூறுகையில், “சாதாரண கம்ப்யூட்டர்களை வைத்து சைபர் பாதுகாப்பை செய்து வருகிறோம். அதேவேளையில் குவாண்டம் பகுதியில் குறிப்பாக மெட்டிரியல், சென்சார்ஸ், பாதுகாப்பு மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் ஆசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிவேகமாக செயல்படும் குவாண்டம் கம்ப்யூட்டஷேன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
பேட்டியின்போது ரமணிபாலசுந்தரம், விஐடி செயல்இயக்குநர் சந்தியாபென்டரெட்டி, இணைதுணைவேந்தர் பார்த்தசாரதிமல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment