• வரும் 18-ம் தேதி ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்தம்.


 ·         வரும் 18-ம் தேதி ஜாக்டோ ஜியோ ஒரு நாள் வேலை நிறுத்தம்.

    ·         பள்ளிகள் அரசு அலுவலகங்கள் இழுத்து மூடி போராட்டம் - மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் வேலூரில் பேட்டி.

                வேலூர் மாவட்டம், வேலூரில் ஜாக்டோ ஜியோவின் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் குறித்து பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

     இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஜனார்த்தனன், ஜோஷி, சேகர், பாபு, ராமமூர்த்தி, ஜோசப் அன்னய்யா உள்ளிட்ட பல்வேறு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் கலந்து கொண்டு பேசினார்.

                பின்னர் மாயவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

     பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனே அமுல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தகுதி தேர்வு (TET) எழுத வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி ஆசிரியர்களை அச்சுறுத்த  கூடாது. தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அரசின் 30 சதவிகிதம் மேல் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தையும் இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். அதன் பின்னரும் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். எனவே இதனை உடனே செயல்படுத்த வேண்டுமென கூறினார்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.