• வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நிதி ஆதரவு திட்டம்.

·        வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களுக்கான நிதி ஆதரவு  திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் அதன் சார்ந்த துறைகளில் உழவர்கள் எதிர் கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளினை வழங்கிடும் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நிறுவனங்களினை (Agri-tech based Startups) அடையாளம் காணவும், அந்நிறுவனங்களின் தொழில்நுட்பத்தினை உழவர்களிடையே அதிக அளவில் பரப்பிடவும், மேலும், கண்டறியப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் (Startups) நிலைத்தன்மைக்காக நிதி ஆதரவு வழங்கிடும் புதிய திட்டத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்திற்கு தமிழக அரசு மாநில நிதியிலிருந்து ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திட்ட  பயனாளிகள்:

·        தமிழ்நாட்டில் இயங்கும் வேளாண் சந்தைகளுக்கு உகந்தவாறு குறிப்பாக வேளாண் விளைப் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் சதவிகிதம், நீடித்த நிலை அதிகரித்தல் (Shelf life increase) மற்றும் போக்குவரத்து (logistics), கிடங்கு வசதிகள் மற்றும் வேளாண் கருவிகளின் தொழில்நுட்பம் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளினை உருவாக்கிட முனையும் நோக்கம் கொண்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி ஆதரவு பெற முன்னுரிமை அளிக்கப்படும். 

·        உடனடியாக உண்ணக்கூடிய பொருட்களை தயாரிக்கும் புத்தாக்க நிறுவனங்கள் இத்திட்டத்தில் தகுதியானவை அல்ல.

திட்ட செயலாக்கம்:

·        இத்திட்டத்தின் கீழ் புத்தாக்க நிறுவனங்கள் கீழ்கண்டுள்ளவாறு இரண்டு வகைப்படுத்தப்படுகிறது,

1.                 வளர்ச்சி நிலையில் உள்ள (புதிய புத்தாக்க நிறுவனங்கள்) புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூபாய் 10 இலட்சம் (ஒரு அலகு) என நிதி உதவி வழங்கப்படுகிறது.

2.             சந்தைப்படுத்துதலுக்குரிய தயாரிப்புகளை உருவாக்கும் நிலையில் உள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.25 இலட்சம் (ஒரு அலகு) என நிதி உதவி வழங்கப்படுகிறது.

·        வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் அமைத்திட ஆர்வமுள்ளவர்கள்  www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, வேலூர் டோல்கேட் வளாகத்தில் அமைந்துள்ள உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வோண் வணிகம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

·        சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் யாவும், மாநில அளவில், ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை தலைமையில் இயங்கும் மதிப்பீட்டு குழுவின் மூலம் பரிசீலனை செய்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்

தகுதியான அளவுகோல்கள்

·        இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் நிறுவனமானது நிறுவனச் சட்டம் 2013-ன் கீழ் பதிவு செய்த ஒரு தனியார் நிறுவனமாகவோ, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (Limited Liability Partneship, under Limited Liability Partnership Act 2008), அல்லது கூட்டு நிறுவன சட்டம் 1932-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருக்க வேண்டும்.

·        நிறுவனமானது TANSIM அல்லது Startup India ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

·        கடந்த மூன்று வருடங்களில் சராசரி நிகர இலாபமானது (வருமானவரி தாக்கல் அறிக்கை படி) 5 இலட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

·        இப்புத்தாக்க நிறுவனமானது எந்த ஒரு அரசு நிறுவனத்திடமும் எவ்வித நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது மற்றும் எந்தவித அரசு நிறுவனத்தாலும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருத்தல் வேண்டும்.

எனவே, இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள ddab.vellore2024@gmail.com  மற்றும் வேலூர் டோல்கேட் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), வேலூர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதலினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.