• வேலூர் தனித்துவ விவசாய அடையாள எண்.

·        வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்திட வேண்டும் - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

                 பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்திட வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் விவசாய தனித்துவ அடையாள எண் பெறாமல் 8,753 பேர் பி.எம் கிசான் பயனாளிகள் உள்ளனர்.  இவர்கள் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் 21-வது தவணை நவம்பர் 2025-ஆம் மாதத்தில்  பெறுவதற்கு உடனடியாக தங்களது தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டும்.  இதற்கு விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமோ தங்களது சிட்டா மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் சிட்டா பெற்று அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசின் மூலம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து பெற முடியும். எனவே, தனித்துவ விவசாய அடையாள எண் பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அலுவலர்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.