• தேசிய பெண்குழந்தை தினம் - மாநில அரசு விருது.

· பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-24 நாளில் தேசிய பெண்குழந்தை தினத்தையொட்டி வழங்கப்படும்  மாநில அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்.

                    அரசாணை எண்-185 படி  பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்க்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-24 நாளில் தேசிய பெண்குழந்தை தினத்தையொட்டி மாநில அரசு விருது வழங்கி வருகிறது.

 

விருது பெற தேவையான தகுதிகள்;

 

1.                               தமிழ்நாட்டில் வசிக்கும் 13 வயது முதல் 18 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

2.                           பெண் கல்வி, குழந்தை திருமணம் தடுத்தல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இவற்றில் ஏதாவது தனித்துவமான சாதனை புரிந்திருக்க வேண்டும்.

3.                           சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் களையும் விதமாக ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். 

 

விருது விவரம்;

ரூ.1 இலட்சத்திற்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும்.

 

கருத்துரு சமர்பிக்க தேவையான ஆவணங்கள் ;

 

                வீரதீர செயல்புரிந்த குழந்தையின் சாதனை பற்றிய விவரம் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். புகைப்பட ஆதாரங்கள், விருது பெற்ற சான்றிதழ் விவரங்கள் ஆகியவற்றுடன் குழந்தையின் பெயர், தாய் மற்றும் தந்தை பெயர் முகவரி, ஆதார் எண் நகல் ஆகியவற்றுடன் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் முகவரியில் வரும் 12.11.2025-ம் தேதிக்குள் பதிவு செய்து இதன் நகல் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சமி தெரிவித்துள்ளார்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• அடுக்கம்பாறையில் நர்வம் கிட்ஸ் மழலையர் பள்ளி .

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.