• வேலூர் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் 20 ஆண்டுகள் சிறை.
· வேலூர் அருகே தவறான முறையில் பழகி மிரட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் நீதிமன்றம் உத்தரவு.
வேலூர் மாவட்டம், வேலூர் அருகே பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம் பெண். இவர் பிளஸ் 2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் இவரது சித்தப்பா ரமேஷ் (38). கூலித் தொழிலாளி. இவர் தனது அண்ணன் மகளான பள்ளி மாணவியிடம் தவறான முறையில் பழகி பலமுறை மிரட்டி பாலியல் அத்துமீறல்கள் செய்துள்ளார்.
இதனால் மாணவிக்கு 2 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நடந்து வந்த நிலையில், இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் ரமேஷை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் மகளிடமே அத்துமீறிய சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்பளிக்கப்பட்டதை அடுத்து ரமேஷ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

Comments
Post a Comment