• வேலூர் ஆதரவற்ற நிலையில் இறந்த 7 சடலம் நல்லடக்கம்.

 ·         வேலூர் ஆதரவற்ற நிலையில் இறந்த 7 சடலத்தை சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம்.

            வேலூர் மாவட்டம், வேலூர் பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையோரம் இறந்த 7 ஆதரவற்றோர் உடல்கள் யாரும் உரிமை கோராத நிலையில்,

     வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 7 உடல்களையும் காவல் துறையின் அனுமதியை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன், வேலூர் பாலாற்றில் உள்ள மயானத்தில் சடங்குகளை செய்து, அவர் சொந்த செலவில் மலர்களை தூவி  முறைப்படி நல்லடக்கம் செய்தார். தொடர்ந்து இறந்தவர்களின் ஆன்மா சந்தியடையும் வழிபாடுகள் செய்யப்பட்டது இதுவரையில் சமூக சேவகர் மணிமாறன் 3500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.


Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி