• வேலூரில் அனைத்து துறை ஊழியர் சங்கங்கள் ஆர்பாட்டம் .
· வேலூரில் அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் அரசு ஊழியர் சங்க துணைதலைவர் வேலு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தீனதயாளன், சேகர், ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று என்.பி.எஸ். / யு.பி.எஸ். திட்டங்கள் ரத்து நிதி மேலாளர்களிடம் டெபாசிட் செய்த தொகையை மாநில அரசுகளுக்கு திருப்பி தந்திட, அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரமாக்கிட, ஒப்பந்த / புற ஆதார / தினசரி வேலைவாய்ப்பை நிறுத்திட,
மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்பிட இ.பி.எஸ். 95-ன் கீழ் உள்ள அனைத்து சந்தாதாரர்களையும் வரையறுக்கப்பட்ட சலுகை ஓய்வூதிய முறைக்கு கொண்டு வந்திட, ஓய்வூதிய சட்டம் 2025-ஐ ரத்து செய்து, ஓபி.எஸ்.ன் கீழ் ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை மீட்டெடுத்திட 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்திட,
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட, நான்கு தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை ரத்து செய்திட, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் / நிறுவன மயமாக்குதல் மற்றும் அரசு துறைகளின் அளவை குறைத்தல் ஆகியவற்றை நிறுத்திட,
ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவரும் அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சையை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து ஒரு விரிவான சுகாதார / காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட, கல்வி-பொது சுகாதாரத் துறைகளை வலுப்படுத்திட தேசிய கல்விக் கொள்கையை கைவிட அரசியலமைப்பின் பிரிவு 310, 311(2) (எ)(பி)(சி)- ஐ ரத்து செய்திட
மத்திய, மாநில உறவுகளை மறுவரையறை செய்திட கூட்டுறவு கூட்டாட்சியை பாதுகாத்திட அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையை நிலை நிறுத்திட அனைத்து வகையான வகுப்புவாதம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெருமளவில் இணைந்திடுவோம்!
பணி நேரம் கடந்து பணி செய்ய கட்டாயபடுத்தும் போக்கை முழுமையாக கைவிட கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Comments
Post a Comment