• ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோவிலில் சரஸ்வதி யாகம்.
· ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோவிலில் சரஸ்வதி யாகம்.
· 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டி தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா ஸ்ரீ சரஸ்வதி யாகத்தில் எழுதுகோல்களை வைத்து பூஜை செய்து மாணவர்களுக்கு வழங்கினார்.
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கும் விழா சரஸ்வதி யாகம் நடைபெற்றது.
வேலூர் தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஸ்ரீ மேதாசூக்தயாகம் எனப்படும் சரஸ்வதி யாகத்தில் புனித நீரை வைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகத்திற்கு பின்னர் புனித நீர் எழுதுகோல்களின் மீது ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு மாணவர்களும் மாணவிகளும் நல்ல மதிப்பெண்களை பெறும் நோக்கில் எழுதுகோல்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சௌத்ரி உள்ளிட்டோரும் திரளான மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment