• வேலூரில் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழா.
· வேலூரில் ஈஷா யோகா மையம் சார்பில் மகா சிவராத்திரி விழா – பக்தர்களுக்கு அன்னதானம் .
வேலூர், ஈஷா யோகா மையம் சார்பில் மகா சிவராத்திரி விழா தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றத மகா சிவராத்திரி விழாவில் சத்குரு அருளுரை, தியானம், பிரசித்தி பெற்ற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அது இங்கே நேரடியாக பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.
வேலூரில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் நர்மதா அசோக், சுதாகர், மகேஸ்வரி, முத்து, ஸ்ரீ பிரியா, இந்து முன்னணி மகேஷ், தண்டபாணி முதலியார் திருமண மண்டப உரிமையாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் ஈஷா யோகா மையம் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கடசுப்பு, தன்னார்வலர்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Comments
Post a Comment